ஓட்ஸ் குக்கீஸ்



என்னென்ன தேவை?

வெண்ணெய் - 100 கிராம்,
தூள் சர்க்கரை - 50 கிராம்,
மைதா - 150 கிராம்,
 ஓட்ஸ் - 100 கிராம்,
 உப்பு - 1 சிட்டிகை,
பேக்கிங் பவுடர்- 1/2 டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்,
தண்ணீர் - 1 டேபிள் ஸ்பூன்.

எப்படிச் செய்வது?


ஓட்ஸை ஒரு பேனில் ரோப் செய்து எடுக்கவும். பிறகு வெண்ணெய், வெனிலா எசன்சை சேர்த்து பீட் செய்துகொள்ளவும். மைதா, சர்க்கரை,  பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்து எடுக்கவும். பிறகு மைதா கலவையில் வெண்ணெய் மற்றும் ஓட்ஸை தண்ணீர் சேர்த்து நன்கு  பிசைந்து சப்பாத்தி வடிவத்தில் திரட்டி, குக்கீஸ் கட்டரை கொண்டு கட் செய்து ஃப்ரீ ஹீட்  செய்த அவனில் பேக் செய்து எடுத்தால்  (300C- 15 நிமிடம்) சுவையான ஓட்ஸ் குக்கீஸ் ரெடி.

குறிப்பு: ஃப்ரீ ஹீட் 200C -10 நிமிடம் செய்ய வேண்டும்.