இத்தாலியன் மசாலா குக்கீஸ்



என்னென்ன தேவை?

வெண்ணெய் - 100 கிராம்,
தூள் சர்க்கரை - 50 கிராம்,
மைதா - 200 கிராம்,
இத்தாலியன் சீசனிங் மிஸ் - 1-1½  டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர்- 1/2 டீஸ்பூன்,  
உப்பு - 1 சிட்டிகை,
வெனிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்,
தண்ணீர் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?


மைதா, சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சல்லடையில் சலித்து அதில் வெண்ணெய், தண்ணீர், வெனிலா எசன்ஸ் மற்றும்  இத்தாலியன் சீசனிங் மிஸ் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும். பிறகு அதை சப்பாத்தி வடிவத்தில் திரட்டி குக்கீஸ்  கட்டர் கொண்டு வேண்டிய வடிவத்தில் கட் செய்து எடுத்து அவனில் 150C -15 நிமிடம் பேக் செய்து எடுத்தால் சுவையான இத்தாலியன்  மசாலா குக்கீஸ் ரெடி.

குறிப்பு: ஃப்ரீ ஹீட் 200C - 10 நிமிடம் செய்ய வேண்டும்.