நான்கட்டாய் குக்கீஸ்



என்னென்ன தேவை?

மைதா - 1 கப்,
ரவை - 2 மேசைக்கரண்டி,
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்,
வெண்ணை - 1/2 கப்,
பொடித்த சர்க்கரை - 1/2 கப்,
 ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,
பொடித்த பிஸ்தா - அலங்கரிக்க.

எப்படிச் செய்வது?


ஒரு பாத்திரத்தில் மைதாவை சலிக்கவும். உடன் ரவை, பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில்  வெண்ணை மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து  கொள்ளவும். இதனுடன் மைதா மற்றும் ரவை கலவையை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து  கொள்ளவும்.

மாவில் அதிக  எண்ணை பசையாக இருந்தால் சிறிதளவு மைதா சேர்த்துக் கொள்ளலாம். அதே சமயம் மாவு கலவை கெட்டியாகவும் இருக்கக்கூடாது.  மாவினை சின்ன உருண்டைகளாக உருட்டி நடுவில் லேசாக அழுத்தி அதில் பிஸ்தா கலவை கொண்டு மைக்ரோ அவனில் 15 நிமிடம்  பேக் செய்யவும்.

குறிப்பு: ஃப்ரீ ஹீட் 180C 10 நிமிடம் செய்ய  வேண்டும்.