ராகி குக்கீஸ்



என்னென்ன தேவை?

மைதா - 100 கிராம்,
ராகி - 100 கிராம்,
பிரவுன் சுகர் - 150 கிராம்,
வெண்ணெய் - 100 கிராம்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்,
பால் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், வெனிலா எசன்ஸை சேர்த்து பீட் செய்துகொள்ளவும். ராகியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.  வறுத்த ராகி, மைதா, பிரவுன் சுகர், பேக்கிங் பவுடரை சலித்து வெண்ணெய் உடன் சேர்க்கவும்.பிறகு சிறிது பால் சேர்த்து  பிசைந்துகொள்ளவும். குக்கீஸ் கட்டரைக் கொண்டு வேண்டிய வடிவத்தில் கட் செய்து ஃப்ரீ ஹீட் செய்த ஓவனில் 300C- 15 நிமிடம் பேக்  செய்து எடுத்தால் சுவையான ராகி குக்கீஸ் ரெடி.

குறிப்பு: ஃப்ரீ ஹீட் 250C- 10 நிமிடம் செய்ய வேண்டும்.