சாக்லெட் கேக்



என்னென்ன தேவை?

மைதா - 2 கப்,
சர்க்கரை - 2 கப்,
முட்டை - 4,
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்,  
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 400 கிராம்,
சாக்லெட் - 400 கிராம்.

எப்படிச் செய்வது?


ஒரு பாத்திரத்தில் சர்க்கரையையும் வெண்ணெயையும் நன்கு கிரீம் போல வரும் வரை பீட் செய்ய வேண்டும். சாக்லெட்டை டபுள் பாய்லர்  செய்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்து  அதில் வெண்ணெய், சர்க்கரை கொட்டி நன்கு பீட் செய்ய வேண்டும். மேலும் இதனுடன் பேக்கிங் பவுடர் வெனிலா எசன்சை சாக்லெட்டை  சேர்த்து அடித்துக்கொள்ளவும். பின்னர் சிறிது சிறிதாக மைதாவை சேர்த்து நன்கு கலக்கவும். பேக்கிங் பேனை வெண்ணெய் மற்றும் மாவு  தடவி ரெடி செய்து அதில் இந்த கலவையை கொட்டவும். அவனை ஃப்ரீ ஹீட் 200C- 10 நிமிடம் செய்து பிறகு பேக்கிங் பேனை அவனில்  வைத்து 300C- 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். ஆறியதும் பேனில் இருந்து எடுக்கவும்.சுவையான சாக்லெட் கேக் ரெடி.