கப் கேக்



என்னென்ன தேவை?

மைதா- 250 கிராம்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
சர்க்கரை - 200 கிராம்,
வெண்ணெய் - 100 கிராம்,
முட்டை - 2,

பால் - 120 மி.லி.,
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். சல்லடையில் மைதா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும்.  முட்டையில் வெண்ணெய், சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து மிருதுவாக அடித்துக்கொள்ளவும். மைதா கலவை கொஞ்சம் பால்  கொஞ்சம் என சிறிது சிறிதாக கலந்துகொள்ளவும். கட்டி இல்லாமல் நைசாக இருக்க வேண்டும். பின்  கட் கேர் ட்ரேவில் கப்களை வைத்து  மாவினை முக்கால்வாசி  வரும் வரை ஊற்றிக்கொள்ளவும். 200C ஃப்ரீ ஹீட் செய்த அவனில் 150 நிமிடம் 300C பேக் செய்து எடுத்தால்  சுவையான கப் கேக் ரெடி.

குறிப்பு: கிரீம் அல்லது தேங்காய் துருவலை கேக்கின் மேல் போட்டு சுவைக்கலாம்.