தேன் கேக்




என்னென்ன தேவை?

மைதா - 100 கிராம்,
தேன் - 60 மி.லி.,
முட்டை - 4,
கேஸ்டர் சுகர் - 150 கிராம்,
 பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக்கொள்ளவும். மைதா, பேக்கிங் பவுடரை சலித்து வைத்துக்கொள்ளவும்.  முட்டையுடன் கேஸ்டர் சுகரை சேர்த்து பீட் செய்யவும். அதன்பின்னர் இந்த கலவையில் தேனை சேர்த்து நன்கு அடிக்கவும். மேலும்  இதனுடன் எசன்ஸ் ஊற்றி கலந்து அதில் மாவை சிறிது சிறிதாக தூவி கலக்கவும். மாவை கரண்டியை போட்டு மென்மையாக கலக்கவும்.  அவனில்  350C ஃப்ரீ ஹீட் செய்யவும். எல்லாம் ஒன்றாக சேரும்படி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். பேக்கிங் பேனை வெண்ணெய்  மற்றும் மாவு தடவி ரெடி செய்து அதில் இந்த கலவையை கொட்டவும். பிறகு அவனில்  300C- 30 நிமிடம் பேக் செய்து எடுத்தால்  சுவையான தேன் கேக் ரெடி.