தேங்காய் கேக்



என்னென்ன தேவை?

மைதா - 2 கப்,
தேங்காய் துருவல் - 1½ கப்,
சர்க்கரை - 1 கப்,
பால் - 1 கப்,
முட்டை - 2,
வெண்ணெய் - 1 கப்,

உப்பு - 1 சிட்டிகை,
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?


ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். இதில் வெண்ணெய் சேர்த்து  கலந்து வைக்கவும். முட்டையை அடித்து அதில் பால், வெனிலா எசன்சை கலந்துகொள்ளவும். மேலும் இதை மாவு கலவையில் சேர்த்து  கலந்து தேங்காய் துருவலும் சேர்க்கவும். பேக்கிங் பேனை வெண்ணெய் மற்றும் மாவு தடவி ரெடி செய்து அதில் இந்த கலவையை  கொட்டவும். அவனை ஃப்ரீ ஹீட் (200C- 10 நிமிடம்) செய்த பிறகு பேக்கிங் பேனை 300C - 40 நிமிடம் அவனில் பேக் செய்து எடுக்கவும்.  ஆறியதும் பேனில் இருந்து கேக்கை எடுக்கவும்.சுவையான தேங்காய் கேக் ரெடி.