மாம்பழ சீஸ் கேக்



என்னென்ன தேவை?

மேரி பிஸ்கட்ஸ் - 10,
வெண்ணெய் - 10 கிராம்,
பனீர் - 50 கிராம்,
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்,
மாம்பழத் துண்டுகள் - 10-15,
ஜெலடின் - 1 டீஸ்பூன்,  
லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன்,
சர்க்கரை - 100 கிராம்,
மாம்பழச் சாறு - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

மேரி பிஸ்கட்டை உருகிய வெண்ணெயுடன் பொடித்து சேர்த்து நன்றாக கிளறவும். இந்த கலவையை பெரிய பாத்திரத்தின் அடியில் மட்டும்  நிரப்பவும். ஜெலடினை சுடுநீரில் கரைத்து ஆறியதும் மாம்பழச்சாறு, தயிர், பனீர், லெமன் ஜூஸ், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுத்து  சுத்தி, அதை ஒரு மோல்டிங் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீஸரில் வைக்கவும். கலவை சற்றுக் கெட்டியானவுடன் மாம்பழத் துண்டுகளை மேலே  தூவி பரிமாறவும்.சுவையான மாம்பழ சீஸ் கேக் ரெடி.