சைனீஸ் சிக்கன் ஃப்ரைதேவையான பொருட்கள்

கோழி - 1/2 கிலோ,
வெங்காயம் - 1,
தேங்காய் - 1/2 கப்,
வினிகர் - 1/4 கப்,
நல்லமிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
அஜினோ மோட்டோ - 1/4 டீஸ்பூன்,
கார்ன் ஃபிளார் மாவு - 2 டேபிள் ஸ்பூன்,
மைதா மாவு - 1 மேசைக்கரண்டி,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

கோழியை எலும்புடன் உருண்டைத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். வெங்காயம் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கழுவிய கோழி துண்டுகளுடன் அரைத்த வெங்காயம், நல்லமிளகுத்தூள், மஞ்சள் தூள், சோயா சாஸ், வினிகர், நல்லெண்ணெய், அஜினோ மோட்டோ, உப்பு சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்துள்ள கோழித்துண்டை எல்லாவற்றையும் குக்கரில் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

பின் அரை வேக்காடு இறக்கவும். பின் கார்ன் ஃப்ளார், மைதா மாவு போட்டு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் பின் கோழித்துண்டுகளை கரைத்து வைத்துள்ள மாவில் துவைத்து எண்ணெயில் போட்டு சிவக்கும் அள விற்கு வறுத்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே பரிமாறவும். சைனீஸ் சிக்கன் ரெடி.