இது நம்ம விலாஸ்!



1959ம் ஆண்டு சிங்கப்பூரில்தான் முதன் முதலில் வீரப்ப செட்டியாரால் துவங்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் உள்ள நாகூரை சேர்ந்த இவர், சிங்கப்பூரில் கேக் மற்றும் இனிப்பு விற்பனை செய்யப்படும் பேக்கரி உணவகமாகத்தான் இதனை முதன் முதலில் துவங்கினார். உணவின் சுவை அங்கு வாழும் இந்தியர்களுக்கு மட்டும் இல்லாமல் மலாய் மற்றும் சீன மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 1964ம் ஆண்டு இவரின் மகன் மருதப்ப செட்டியார் அவர்கள் பொறுப்பேற்க, பேக்கரியை தென்னிந்திய உணவகமாக விரிவாக்கம் செய்ய நினைத்தார்.

அதன்படியாவும் மாற்றி அமைத்தார். உணவகத்தில் சமைக்கப்படும் ஒவ்ெவாரு உணவும் அவரின் மனைவி ருக்மணி அம்மாளின் கைவண்ணத்தில்தயாரிக்கப்பட்டது. பாரம்பரியம் மாறாமல் சமைக்கப்படும் உணவுகளுக்கு எப்போதுமே நல்ல மதிப்புண்டு. மக்களும் அதற்கு ஆதரவு அளித்தனர். அன்று முதல் இன்று வரை அதே சுவை மற்றும் மனம் மாறாமல் விருந்து படைத்து வருகிறார்கள் இவ்வுணவகத்தின் செஃப்களான அலெக்சாண்டர் மற்றும் சிவக்குமார். அவர்களின் கைப்பக்குவத்தில் ேதாழியர் உங்களுக்காக ‘தம்பி விலாஸ்’ உணவகத்தின் பாரம்பரிய செட்டிநாடு உணவுகளை சுவைத்து மகிழுங்கள்...

தொகுப்பு: ப்ரியா மோகன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்