கறி தோசை (கோழி)



தேவையான பொருட்கள்

தோசை மாவு - 1 தேக்கரண்டி,
முட்டை - 1,
வறுத்த கறி (கோழி) - 100 கிராம்,
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை


வறுத்த கறி அல்லது கோழி சுக்காவில் உள்ள எலும்பினை நீக்கி, மசாலாவுடன் கோழிக்கறியை தனியாக எடுத்து நன்றாக கொத்தி தனியாக வைக்கவும். தோசைக்கல்லில் தோசை ஊற்றி, அதன் மேல் முட்டையை உடைச்சு ஊற்றி தேசை மேல் நன்றாக பரப்பிவிடவும். அதன் மேல் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். அதன் பிறகு அதன் மேல் கொத்தின சிக்கன் கலவையை போட்டு பரப்பிவிட்டு கறிவேப்பிலை சேர்த்து அலங்கரிக்கவும். பிறகு தோசையை திருப்பி போட்டு பொன்னிறமாக வேகவைத்து சூடாக பரிமாறவும்.