கோழி சுக்கா



தேவையான பொருட்கள்

கோழி - 100 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது - 30 கிராம்,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
கரம் மசாலா - 2 கிராம்,
மஞ்சள் தூள் - 2 கிராம்,
நெய் - 10 கிராம்,
மிளகாய்த்தூள் - 10 கிராம்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்.

செய்முறை

கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்த வதக்கிய பிறகு, சிக்கனை சேர்க்கவும். பிறகு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சோம்புத்தூள், சீரகத்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி மூடி போட்டு சிக்கனை வேகவைக்க வேண்டும். சிக்கன் நன்றாக வெந்ததும், தண்ணீர் வற்றும் வரை சிவக்க வறுக்க வேண்டும். தண்ணீர் வற்றி சிக்கன் சுக்காவாக ஆன பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும்.