ஸ்பெஷல் சிக்கன் 65



தேவையான பொருட்கள்

கோழி - 200 கிராம்,
வரமிளகாய் விழுது - 60 கிராம்,
 மஞ்சள் தூள் - 5 கிராம்,
கரம் மசாலா - 5 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது - 25 கிராம்,
லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மிளகுத் தூள் - 5 கிராம்.

செய்முறை

கோழி இறைச்சியை நன்றாக கழுவி, தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்துக் கொள்ளவும். அதனுடன் மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும். சுமார் ஒரு மணி நேரமாவது சிக்கன் மசாலாவில் நன்கு ஊற வேண்டும். அதன் பிறகு கடாயில் எண்ணை சேர்த்து சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக சேர்த்து பொரிக்கவும். தேவைப்பட்டால் சிறிது கறிவேப்பிலையும் எண்ணையில் பொரித்து சிக்கனுடன் சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.