மாம்பழமாம் மாம்பழம்!



மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்காக கைலாசத்தில் பெரிய சண்டையே ஏற்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாராலும் விரும்பி சுவைக்கப்படும் காய் கனி என்றால் அது மாங்காய், மாம்பழம் தான். அதில் 30 வகையான உணவுகளை செய்து அசத்தியுள்ளார் மீனாட்சி.

வேலூரை சேர்ந்த இவர் சொந்தமாக டெக்ஸ்டைல்ஸ் தொழிலை நிர்வகித்து வருகிறார். தொழில் ஒரு பக்கம் என்றாலும், சமையல் மேல் ஏற்பட்ட அதிக ஆர்வம் காரணமாக பல விதமான புதுமையான உணவுகளை தன்னுடைய பொழுது போக்காக செய்து வருகிறார். மேலும் பத்திரிகையிலும் சமையல் சார்ந்த துணுக்குகள், செய்திகளையும் எழுதி வருகிறார்.

அதன் வெளிப்பாடுதான் இந்த இதழில் தோழியர்களுக்காக 30 வகை மாம்பழ உணவுகளை செய்து அசத்தியுள்ளார் மீனாட்சி. கோடை காலத்தில் தான் மாம்பழ சீசன் என்பதால், இந்த மாதம் உங்களுக்கு பிடித்த மாம்பழத்தில் பல அசத்தலான உணவுகளை செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை ஆச்சரியப்பட செய்யுங்கள்.

தொகுப்பு: ப்ரியா
படங்கள்: சந்தோஷ்குமார்