மாங்காய் சாதம்



தேவையான பொருட்கள்

துருவிய மாங்காய் - 1 கப், இஞ்சி துருவல் - 1 ஸ்பூன், பச்சை மிளகாய் - 6, கறிவேப்பிலை - 1 கொத்து, கடுகு - 1/2 ஸ்பூன், வெந்தய பொடி - 1 ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன், க.பருப்பு, உ.பருப்பு, கடலைக்காய் தலா - 2 ஸ்பூன், உப்பு - சுவைக்கு, மஞ்சள் தூள், ஆற வைத்த சாதம் - 3 கப், எண்ணெய் - 4 ஸ்பூன்.

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்க்கவும். பின்பு அதில் க.பருப்பு, உ.பருப்பு, கடலைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் துருவிய மாங்காய், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். பின் சாதம் சேர்த்து நன்கு கலக்கவும். சுவையான மாங்காய் சாதம் தயார்.