கொள்ளு மாங்காய் வடை



தேவையான பொருட்கள்

மாங்காய் துருவல் - 1/2 கப், வெங்காயம் - 1/2 கப், கொள்ளு - 150  கிராம், இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 4 பல், காய்ந்த மிளகாய் - 4, பச்சை மிளகாய் - 2, சோம்பு - 1 ஸ்பூன், க.பருப்பு - 1 கப், பச்சரிசி - 1 கைப்பிடி, உப்பு - சுவைக்கு, எண்ணெய் - 500 மில்லி.

செய்முறை

கொள்ளு, கடலைப்பருப்பு, பச்சரிசி இவைகளை நன்கு ஊற வைத்து அத்துடன் மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு சேர்த்து கரகரப்பாய் அரைக்கவும். அதில் துருவிய மாங்காய், அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, சிறு சிறு வடைகளாய் தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான கொள்ளு மாங்காய் வடை ரெடி.