மாங்காய், வெல்லம் பச்சடி



தேவையான பொருட்கள்

தோல் சீவிய மாங்காய் துண்டுகள் - 2 கப் (அல்லது) ஒரு முழு மாங்காய், கடுகு - தாளிக்க, காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - 1 கொத்து, உப்பு - 1 சிட்டிகை, மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன், எண்ணெய் - 1 ஸ்பூன், வெல்லம் - 100 கிராம்.

செய்முறை

மாங்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாய் நறுக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். பின்பு வெல்லத்தை பொடித்து, கரைத்து வடிகட்டி நன்கு நுரை வர கொதிக்க விடவும். பின்பு அதில் வேக வைத்த மாங்காய் சேர்த்து கெட்டி படும் வரை கிளறவும். கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை  தாளிக்கவும். சுவையான பச்சடி தயார். பிரட், தோசை, சப்பாத்திக்கு உகந்த சைடு டிஷ்.