கோதுமை குலோப்ஜாமூன்



தேவையான பொருட்கள்

பால் - 1 கப், சர்க்கரை - 1 கப், கோதுமை மாவு - 3/4 கப், எண்ணெய் பொரிப்பதற்கு - தேவையான அளவு.

செய்முறை

வாணலியில் 3/4 கப் சர்க்கரையை 1/2 கப் தண்ணீர் விட்டு நன்கு கரைய விடவும். பாகு பதம் தேவையில்லை. பிறகு பாலை காய்ச்சி அதில் மீதமுள்ள சர்க்கரை சேர்த்து கோதுமை மற்றும் நெய் கலந்து கட்டி இல்லாமல் அடுப்பை சிறு தீயில் வைத்து கிளறவும். நெய் கொஞ்சம் கலவையில் சேர்த்து ஒட்டாமல் கிளறவும். கலவை லேசான இளம்சூட்டில் இருக்கும்போது நெய்யை கையில் தடவிக்கொண்டு உருண்டைகளாக உருட்டி மிதமான சூட்டில் எண்ணெய் காய்ந்ததும் பொரித்து சர்க்கரை பாகில் போட்டு ஊற வைத்து பரிமாறவும்.