மைகாட்... வேற வழியே இல்லையா?





க்ளாமர் உலகு தன்னை வெளியேற்றியதால், ‘ஆக்டிங்’ உலகில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் ஸ்ரேயா. பெயரிடப்படாத வங்காள படம் ஒன்றில், பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். இந்தப் படத்தை ரிதுபோர்னோ கோஷ் இயக்குகிறார். ஏற்கனவே ஐஸ்வர்யாவின் வெற்று முதுகை ‘சோக்கர்பாலி’ படத்தில் காண்பித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர். எனவே, ஸ்ரேயாவின் ஏதேனும் ஒரு பரந்த பரப்பையும் திரையில் காண்பிப்பார் என உறுதியாக நம்பலாம்!