விஜய் 65



இதுவரை விஜய் நடித்த படங்களின் எண்ணிக்கை 65. இதில் சிறுவனாக நடித்த படங்கள் 6. ‘வெற்றி’, ‘குடும்பம்’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘வசந்த ராகம்’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’, ‘இது எங்கள் நீதி’. இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்கிறார். இது விஜய்யின் 66வது படம். கவுரவ வேடமும் இதில் அடங்கும்.

மேற்கண்ட 6 படங்களில் சிறுவனாக நடித்திருந்த விஜய்யை இயக்கியவர், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன். ‘நாளைய தீர்ப்பு’ மூலம் விஜய்யை ஹீரோவாக அறிமுகப்படுத்திய அவர், தொடர்ந்து விஜய்யை வைத்து ‘செந்தூர பாண்டி’, ‘ரசிகன்’, ‘தேவா’, ‘விஷ்ணு’, ‘மாண்புமிகு மாணவன்’, ‘ஒன்ஸ்மோர்’, ‘நெஞ்சினிலே’, ‘சுக்ரன்’, ‘பந்தயம்’ படங்களை இயக்கினார். அதாவது, தன் தந்தை இயக்கத்தில் விஜய் நடித்த படங்களின் எண்ணிக்கை 16.

விஜய்யை 2 முறை இயக்கியவர்கள் பாசில், வின்சென்ட் செல்வா, சித்திக், தரணி, பேரரசு, ரமணா, பிரபுதேவா ஆகியோர்கள். ‘காதலுக்கு மரியாதை’, ‘கண்ணுக்குள் நிலவு’ படங்களை பாசில் இயக்கினார். ‘ப்ரியமுடன்’, ‘யூத்’ படங்களை வின்சென்ட் செல்வா இயக்கினார். ‘ப்ரண்ட்ஸ்’, ‘காவலன்’ படங்களை சித்திக் இயக்கினார். ‘கில்லி’, ‘குருவி’ படங்களை தரணி இயக்கினார். ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ படங்களை பேரரசு இயக்கினார். ‘திருமலை’, ‘ஆதி’ படங்களை ரமணா இயக்கினார். ‘போக்கிரி’, ‘வில்லு’ படங்களை பிரபுதேவா இயக்கினார்.

விஜய்யை 3 முறை இயக்கியவர்கள் ஏ.வெங்கடேஷ், கே.செல்வபாரதி, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர். ‘செல்வா’, ‘நிலாவே வா’, ‘பகவதி’ படங்களை ஏ.வெங்கடேஷ் இயக்கினார். ‘நினைத்தேன் வந்தாய்’, ‘ப்ரியமானவளே...’, ‘வசீகரா’ படங்களை கே.செல்வபாரதி இயக்கினார். ‘ராஜாவின் பார்வையிலே’ ஜானகி சவுந்தர், ‘சந்திரலேகா’ நம்பிராஜ், ‘கோயமுத்தூர் மாப்ளே’ சி.ரங்கநாதன், ‘பூவே உனக்காக’ விக்ரமன், ‘வசந்த வாசல்’ எம்.ஆர்., ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ ஆர்.சுந்தர்ராஜன்,

 ‘லவ் டுடே’ பால சேகரன், ‘நேருக்கு நேர்’ வசந்த், ‘துள்ளாத மனமும் துள்ளும்’ எஸ்.எழில், ‘என்றென்றும் காதல்’ மனோஜ் பட்நாகர், ‘மின்சார கண்ணா’ கே.எஸ்.ரவிகுமார், ‘குஷி’ எஸ்.ஜே.சூர்யா, ‘பத்ரி’ பி.ஏ.அருண் பிரசாத், ‘ஷாஜகான்’ கே.எஸ்.ரவி, ‘தமிழன்’ மஜீத், ‘புதிய கீதை’ கே.பி.ஜெகன்நாத், ‘உதயா’ அழகம் பெருமாள், ‘மதுர’ ஆர்.மாதேஷ், ‘சச்சின்’ ஜான் மகேந்திரன், ‘அழகிய தமிழ் மகன்’ பரதன், ‘வேட்டைக்காரன்’ பாபுசிவன், ‘சுறா’ எஸ்.பி.ராஜகுமார், ‘வேலாயுதம்’ ஜெயம் ராஜா, ‘நண்பன்’ ஷங்கர், ‘தலைவா’ ஏ.எல்.விஜய், ‘ஜில்லா’ ஆர்.டி.நேசன் என, விஜய்யை ஒருமுறை மட்டுமே இயக்கிய 26 பேர்களின் லிஸ்ட் முடிகிறது. இவர்களில் சிலருக்கு அடுத்த படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்காமல், போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

 தேவா