சமந்தாவின் தொப்புள் சபதம்!



ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பில், பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா சின்னச்சின்ன தமிழ் வார்த்தைகள் பேச கற்றுக் கொண்டாராம். அதை அங்கிருந்த உதவியாளர்களிடம் பேசிக்காட்டி, சபாஷ் வாங்கிக் கொண்டாராம்.

டான்ஸ் மாஸ்ட ரும், பிரகாஷ்ராஜின் இரண்டாவது காதல் மனைவியுமான போனிகபூர், தன் கணவர் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘டோனி’, ‘உன் சமையலறையில்’ படங்களில், பிரகாஷ்ராஜுடன் பணியாற்றிய அனுபவத்தை அடிப்படையாக வைத்து, படம் இயக்க ஆயத்தமாகி விட்டாராம்.

சமந்தாவுக்கு தொப்புளில் வளையம் அணியும் பழக்கம் இருந்தது. இதை டோலிவுட் நடிகை ஒருவர் அப்பட்டமாக காப்பியடித்ததால் கடுப்பான அவர், உடனே அந்த வளையத்தைக் கழற்றி வீசிவிட்டாராம். இனிமேல் தொப்புளில் எதையும் மாட்டுவதில்லை என்பது அம்மணியின் சபதம்.

- தேவராஜ்