கெஞ்சிக் கூத்தாடி பாட்டு வாங்கிய நடிகை!



உதயதாரா கதாநாயகியாக நடிக்கும் படம் ‘பிரம்மபுத்ரா’. இந்தப் படத்தின் கதையை இயக்குனர் சொன்னதுமே நடிக்க சம்மதம் சொல்லிவிட்ட தாரா, தனக்கு பேசப்பட்ட சம்பளத் தொகையில் தள்ளுபடி செய்து தொழில் பக்தியைக் காட்டியிருக்கிறார்.

முக்கால்வாசிப்படம் முடிவடைகிற நிலை வந்தும், கதாநாயகியாக நடிக்கும் அவருக்கு ஒரு பாடல்காட்சிகூட எடுக்கவில்லையாம். உதவி இயக்குனர்களிடம் ரகசிய விசாரணை போட்டிருக்கிறார் தாரா. ‘கதைப்படி கதாநாயகிக்கு பாட்டு சீன் இல்லை’ என்கிற பதில் கிடைத்திருக்கிறது.

தொடர்ந்து பிடிவாதம் பிடித்து, கெஞ்சிக்கூத்தாடி, ஒரே ஒரு பாட்டுக்காட்சியை வாங்கிவிட்டார் தாரா. கோல்டன் மீடியா அண்ட் நிலா என்டர்பிரைசஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் தாமஸ். முத்துவிஜயன், தமிழமுதன் பாடல்களுக்கு சுனில் சேவியர் இசையமைக்கிறார். உதயதாரா கெஞ்சிக்கூத்தாடி வாங்கிய அந்தப் பாடல் தான் ஹைலைட் டாக இருக்குமாம்.