குரல் His Mind Voice



அண்ணா! எல்லாருக்கும் வணக்கம்ங்ணா! எனக்கு இந்த சுத்தி வளைச்சு பேசுறதெல்லாம் தெரியாதுங்ணா! ஏன்னா, எங்கப்பா எனக்கு வளைச்சு சுத்திப் பேசறதுக்குதான் கத்துக் குடுத்துருக்காருங்ணா! பாக்கறதுக்கு அப்பாவி மாதிரி இருக்கேன்னு பொதுவான கருத்து இருக்குங்ணா! ஆனா ஃப்ரெண்ட்ஸ் மத்தியில ‘அடப்பாவி’ன்னு ஒரு அதிரிபுதிரி டைட்டில் எனக்கு இருக்குங்ணா!

அப்பப்ப அணில் சேவை செய்றதுல எனக்கொண்ணும் பெருசா விருப்பம் இல்லீங்ணா! அப்படியெல்லாம் செஞ்சாதான் ‘அங்க போய்’ உக்காந்துக்கிட்டு அதிகாரம் பண்ணமுடியும்னு அப்பா அட்வைஸ் பண்றாருங்ணா! அங்க இங்க போகும்போது ‘வருங்கால ... ’ போஸ்டர்கள பாக்கும்போது சின்னதா ஒரு ஆச வந்து கன்னாபின்னானு கபடி ஆடிட்டுப் போகுதுங்ணா!

ஆட்டம்னு சொன்னதும் என்னோட டான்ஸ் பெர்ஃபாமென்ஸ் ஞாபகத்துக்கு வந்துபோகுதுங்ணா! நெறையபேரு எங்கிட்ட வந்து டான்ஸ் டிப்ஸ் கேக்றாங்ணா! அது பெரிய காமசூத்ரம் இல்லீங்ணா! ஸாரி, ஸாரி, கம்பசூத்திரம் இல்லீங்ணா! சிகரெட் பிடிச்சு முடிச்சதும், கீழபோட்டு வலது காலால ஒரு அரைவட்டம் அடிச்சு அணைப்பாங்க பாருங்க, அத அப்பிடியே கொஞ்சம் லென்த்தன் பண்ணுனா சூப்பர் ஸ்டெப் கெடைக்கும்ங்ணா! ஊர்ப்பக்கமெல்லாம் பாத்தீங்கன்னா வாய்க்கா வரப்புல, ஆறு, கொளத்துல குளிச்சிட்டு, துண்டை எடுத்து முதுகுக்கு குறுக்கால வச்சுக்கிட்டு, உருட்டி உருட்டி துடைப்பாங்க பாருங்க, அத லென்த்தன் பண்ணினா அட்டகாசமான ஸ்டெப் கெடைக்கும்ங்ணா!

பெருசா ஒரு பட்டம் இருக்குதே, அது யாருக்குன்னு ரொம்ப நாளாவே பஞ்சாயத்து நடக்குதுங்ணா! எனக்கு அதுலயெல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லீங்ணா! ஆனா ஜனங்களா பாத்து, அந்த பட்டத்த எடுத்துட்டு வந்து எனக்குத் தெரியாம என் வீட்டு வாசல்ல வச்சுட்டுப் போயிட்டா, எடுத்து யூஸ் பண்ணிக்குவேங்ணா! ஏன்னா, ஒருதடவ முடிவு பண்ணிட்டா, எம்பேச்சை நானே கேக்கமாட்டேங்ணா!

நெல்பா