ஆண்ட்ரியாவை கவனித்த டைரக்டர்!



ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தில் கவுரவ வேடத்தில் வந்துபோகவே ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஆண்ட்ரியா. அவரது ஈடுபாட்டால் கவரப்பட்ட டைரக்டர், கேரக்டரை டெவலப் செய்து, ஆண்ட்ரியாவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

30 வருடங்களுக்கு முன் ரிலீசான ரஜினியின் ‘மூன்று முகம்’ விரைவில் ரீமேக் ஆகிறது. தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘நய்யாண்டி’, சித்தார்த் நடித்த ‘ஜிகிர்தண்டா’ படங்களின் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிக்கிறார். இதற்காக, ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்த ‘மூன்று முகம்’ படத்தின் ரீமேக் உரிமையை சத்யா மூவீஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளார். ரஜினி கேரக்டரில் நடிப்பது யாரென்று முடிவாகவில்லை.