பிரியாணியில் விழுந்த தமன்னா!



தமன்னா ஒரு விஷயத்துக்கு மட்டும் அளவுக்கதிகமாக சந்தோஷப்படுகிறார். ஐதராபாத் ஸ்பெஷல் பிரியாணி என்றால், அம்மணி 'டயட்’ பற்றி கவலைப்படாமல் சாப்பிடுவார். உடனே உடம்பில் கலோரிகள் அதிகரித்து, உடற்பயிற்சி செய்யும் நேரம் அதிகரிக்குமாம். பிறகு இரண்டு நாட்கள் நான்வெஜ் பக்கம் தலைவைத்துப் படுக்காத அவர், பிறகு ஒவ்வொரு பிளேட்டாக பிரியாணியை முழுங்குவாராம்.

ஆனால், உடல் எடை மட்டும் கூடாமல் அப்படியே இருக்குமாம். கலோரிகளை எரித்துவிடுவது ஒருபுறம் இருந்தாலும், உடல் எடை கூடாமல் பாதுகாப்பது அவருக்கு சேலஞ்சிங்காக இருக்கிறதாம். நினைத்தால் உடல் எடையைக் கூட்டுவதற்கும், குறைப்பதற்குமான மந்திர வித்தை தன் கையில் இருப்பதை நினைத்து அளவுக்கதிகமாக சந்தோஷப்படு கிறாராம்.

தேவா