குரல் His Mind Voice



புரோ, மாமு, மச்சின்னு கூப்பிடறது எல்லாத்தையும் விட அண்ணேன்னு அழைக்கறப்பதான் ஆத்மாவுக்கே திருப்தி கெடைக்குதுண்ணே! எல்லாத்துக்கும் ஆண்டவனோட கிரேஸ் இருந்தா லைஃப் பிரைட்டா இருக்குமுன்னு சொல்லுவாய்ங்க.

எனக்கு ஆண்டவன் கொடுத்த கிரேஸ் என்னோட மனைவி. இந்த கருவாப்பயலுக்கு இப்பிடியொரு செக்கச்செவேல்னு ஒய்ஃபானு கொள்ளப்பேரு பொகைஞ்சிருக்காய்ங்க. கோயில் திருவிழா, கல்யாண மண்டபம்னு கச்சேரி பண்ணிக்கிட்டு இருந்த சந்தோசம் இப்ப இல்லண்ணே!

மொத மொதலா ராஜா அண்ணாமலை மன்றத்துல கச்சேரி வச்சிருக்கேன். எங்கப்பா செத்துப்போயிட்டாருன்னு தகவல் வருது. கச்சேரிய முடிச்சிட்டு கௌம்பலாம்னு, நல்லபடியா கச்சேரிய முடிச்சேன். எல்லாருக்கும் செட்டில் பண்ணி முடிச்சாச்சு.

கையில ஒருபைசா இல்ல. ‘நீ கேளேன் நீ கேளேன்’ கதை மாதிரி யாரார்கிட்டயோ கேட்டுப்பாத்தேன். கெடைக்கல, என்னால சாவுக்குப் போகமுடியல. இன்னைக்கு லட்சக்கணக்கா பணம் பொரட்ட முடியுது. சொந்தக்கம்பெனி ஆரம்பிச்சு படம் தயாரிக்க முடியுது. இதுதாண்ணே விதி.

ஒரு களவாணிப்பய கேரக்டர்ல பாலாண்ணன் ‘நந்தா’வுல இன்ட்ரொட்யூஸ் பண்ணாரு. சன் பிக்சர்ஸ் தயாரிப்புல ‘திண்டுக்கல் சாரதி’யில ஹீரோவா நடிக்கிற அளவுக்கு ஒசந்தாச்சு. அடுத்தடுத்து ஹீரோவா நடிச்சாலும் காமெடியனா நடிக்கத்தாண்ணே பிரிபரன்ஸ் கொடுக்கறேன். நாம்பட்ட கஷ்டத்த எதிரிகூட படக்கூடாதுண்ணே! என்னால முடிஞ்ச ஒதவிய எல்லாருக்கும் செய்யணும். அதுதாண்ணே ஆச!