சூர்யாவின் புது ஜோடி!



கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த கேத்ரின் தெரேசா, அடுத்து சூர்யாவுடன் கைகோர்க்க உள்ளார். ‘அலை’, ‘யாவரும் நலம்’ படங்களின் இயக்குனர் விக்ரம் குமார் வழங்கும் படத்தில் இந்த ஜோடி இணைகிறது.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கும் ஹீரோயின்கள், கால்ஷீட் பிரச்னையில் சிக்கிக்கொள்கிறார்கள். ‘பென்சில்’, ‘ஈட்டி’, ‘வெள்ளைக்கார துரை’ படங்களில் நடித்து வரும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஸ்ரீதிவ்யாவுக்கும் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. ‘நான் கொடுத்த தேதியை விட்டுவிட்டு, அவர்கள் ஃபிக்ஸ் பண்ணிய தேதியில் நடிக்க கூப்பிடுகிறார்கள். இப்படிப்பட்ட படங்களை நான் ரத்து செய்யவும் தயங்கமாட்டேன்’ என்கிறார் ஸ்ரீ‘திவ்’யா!