ராஜீவ்மேனன் சிஷ்யர் நாயகன் ஆகிறார்!



திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பயின்று, ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்த அக்னி இயக்கும் படம் ‘மனித காதல் அல்ல’. கதாநாயகனும் இவர்தான். இவருக்கு ஜோடியாக கொச்சின் அழகி தருஷி நடித்துள்ளார்.

பிளாக் ஸீ மூவீஸ் சார்பில் கே.ஈஸ்வரமூர்த்தி, ஏ.வி.ஆறுமுகம் தயாரித்துள்ள இந்தப்படத்துக்கு ஷம்மீர் சுல்தான் இசையமைக்க, பாரதி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘‘நகைச்சுவையுடன் முற்றிலும் புதிய கோணத்தில் கதை சொல்லியிருக்கிறேன்’’ என்கிறார் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இயக்கி நாயகனாக நடிக்கும் அக்னி.