நயன் காட்டிய விசுவாசம்!



‘இவ்ளோ வெள்ளையா இருந்தும் வாய்ப்பு வந்து வாசக்கதவைத் தட்டமாட்டேன் என்கிறதே’ என்று வருத்தப்படுகிறார் தமன்னா. ஃப்ரெஷ்ஷாக ஃபோட்டோ ஷூட் நடத்தி, புதிய படக்கம்பெனிகளுக்கு தூதுவிட முடிவு செய்திருக்கிறாராம்.

அது 2003ஆம் வருடம். சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ‘மனசினக்கரே’ மலையாளப் படத்தில் அறிமுகமானார் நயன்தாரா. ‘ஐயா’ படம் மூலம் தமிழில் காலூன்றினார். சமீபத்தில் மம்முட்டியுடன் நடிக்கும் ‘டாஸ்கர் தராங்கல்’ படத்தில் நடிப்பதற்காக கொச்சிக்குப் போயிருக்கிறார். பக்கத்து செட்டில் டைரக்டர் சத்யன் அந்திக்காடு இருப்பதைக் கேள்விப்பட்டவர், அங்கே சென்று அவரிடம் நலம் விசாரித்திருக்கிறார்.