ஸ்ருதிஹாசன் தவிக்கிறார்!



கொரட்டாலா சிவா  இயக்கத்தில் தெலுங்குப்படத்தில் மகேஷ்பாபுவுடன் நடித்துவரும் ஸ்ருதிஹாசனை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவருகிறார் சீனியர் ஹீரோ வெங்கடேஷ். அவர் நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கவேண்டும் என்பது கோரிக்கை. ‘எஸ்’ என்று சொல்லவும் முடியாமல், ‘நோ’ என்று தள்ளவும் முடியாமல் தவிக்கிறாராம் ஸ்ருதி.

சினிமா அல்லாத தோழிகளை சந்திக்கும்போதெல்லாம், மீடியாக்களில் வரும் காதல் கிசுகிசுக்கள் பற்றியே பேசி, கடுப்பேற்றுகிறார்களாம். அதனால் ஓல்டு ஃப்ரண்ட்ஸ் சந்திப்புக்கு நோ என்ட்ரி போட்டுவிட்டாராம் பிரியா ஆனந்த்.