நிறைய நடிக்கணும்;நிறைய படிக்கணும்!



லட்சுமி மேனன்

கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தில், மீடியாக்கள் ஓடி ஓடிப்போய் லட்சுமி மேனனிடம் 'காதலை சொல்லுங்கள்?' என்று கேள்வியை நீட்டியதில் செம காண்டாகி விட்டது பொண்ணு. "ஏங்க! நானே பிளஸ் 2 எக்ஸாம்ல மரியாதையான  மார்க் எடுக்கணும்னு ராப்பகலா விழுந்து விழுந்து படிச்சிட்டிருக்கேன். என்கிட்ட போயி காதல் கத்திரிக்கான்னு கேக்குறீங்க.

காதலுங்கறதே சுத்த வேஸ்ட் சமாச்சாரங்க. பணத்தையும், நேரத்தையும் செலவழிச்சு எதுக்குத்தான் இப்படி காதலிக்கிறாங்களோ, அதுல அப்படி என்னதான் இருக்கோ. சில பேர் மணிக்கணக்குல போன்ல பேசுவாங்களாமே... கடற்கரையில கடலை போடுவாங்களாமே.

இரண்டு நாட்டுத் தலைவருங்க நாட்டுப் பிரச்னையையே ஒரு மணி நேரத்துக்குள்ள பேசி முடிச்சிடுறாங்க. அப்படி என்ன தான் இவுங்க பேசுவாங்கன்னே தெரியல. என்னமோ போங்க, இவுங்க காதலும் கத்திரிக்காயும்.எனக்கெல்லாம் காதல் வரவே வராது. நிறைய நடிக்கணும், நிறைய படிக்கணும். இதுதாங்க நம்ம லட்சியம்.

 பிளஸ் 2 முடிச்சிட்டு ஆங்கில இலக்கியம் படிக்கணும். நடிக்கிறதுல ஒரு மாறுதல் வரணும். தடுக்கி விழுந்தா பாவாடை தாவணிய கையில கொடுத்திடுறாங்க. இப்பல்லாம் எந்த கிராமத்துலங்க பாவாடை தாவணி கட்டுறாங்க. அலுத்துப் போச்சு. நிஜத்துல நான் மாடர்னான பொண்ணு. கொடுத்துப் பாருங்க கலக்கிடுறேன்'' என்கிறார் லட்சுமி மேனன்.

-கதிர்