ஆடைக்குறைப்பு ஆப்தே!



ஆண், பெண் உறவு பற்றிய குறும்படத்தில் ஆடைக்குறைப்பு செய்து நடித்த வீடியோ வெளியான பிறகு ராதிகா ஆப்தேவின் மார்க்கெட் நிலவரம் உச்சத்துக்குச் சென்றுள்ளது. அதே நேரம், அவரைப் பற்றிய கடுமையான விமர்சனங்களும் வந்துள்ளன.

ஆனால், அதுபற்றி துளியளவும் கவலைப்படவில்லை என்கிறார் ஆப்தே. தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் நடித்த ‘லயன்’ படத்தில், தனது காட்சிகள் குறைக்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதையடுத்து, இனி டோலிவுட் படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் முரண்டு பிடித்துள்ளார்.