ஆனந்தியின் அழகு சிகிச்சை!



‘கயல்’ ஜோடி, மீண்டும் இணைந்துள்ளது. ‘சாட்டை’ அன்பழகன் இயக்கும் படத்தில் சந்திரன், ஆனந்தி நடிக்கின்றனர். இதை பிரபு சாலமனின் காட் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. தவிர, அதர்வா முரளி ஜோடியாக ‘சண்டிவீரன்’, ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘விசாரணை’ ஆகிய படங்களில் ஆனந்தி நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது முகத்தில் பருக்கள் வந்துவிட்டதால்,  அழகு சிகிச்சை பெற்றுள்ளார்.