கிளுகிளு காட்சிகளால் நடிகைக்கு கல்யாண சங்கடம்!



உடலுக்கு ஊறு விளைவிக்கும் நுண்ணுயிரியின் பெயர் கொண்ட படத்தில் ஹீரோவோடு சில காட்சிகளில் கொஞ்சமென்ன ரொம்பவே நெருக்கமாக நடித்திருக்கிறாராம் பெயருக்கு நடுவே ‘ஷ்’ கொண்ட நடிகை. இப்போது படம் வெளிவந்து இந்தக் காட்சிகளை, 70களில் பிரபலமான இந்திப்படத்தை தன் முன்பெயராகக் கொண்டுள்ள வருங்காலக் கணவர் பார்த்தால் சாமியாடி விடுவாரோ என்று அச்சப்படுகிறாராம்.



‘ஃபிஷ்’ படத்தில் நடித்தபோதுதான் இருவருக்குள்ளும் பற்றிக் கொண்டது. ஜனவரியில் திருமணம். இந்நிலையில் கிளுகிளுப்புக் காட்சிகள் வெளிவருவது நடிகைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். எனவே நுண்ணுயிரி இயக்குனருக்கு போன் போட்டு, தாறுமாறாக நடித்திருக்கும் காட்சிகளை வெட்டியெறியும்படி பர்சனலாக கேட்டுக் கொண்டாராம். ம்ஹூம். நடிகையின் வேண்டுகோள் பரிசீலிக்கப்படவே இல்லையாம். என்னாகுமோ, ஏதாகுமோ என்று டென்ஷனில் இருக்கிறார் ‘ஷ்’.

- லார்டு கிங்