ரீடர்ஸ் கிளாப்ஸ்!



கவுண்டமணியின் ‘49-ஓ’ ஓஹோ என்று பாராட்டப்பட்டு, அவரது திரைவாழ்க்கை ‘அட்ரா அட்ரா’ என்று அசத்தப்போவது நிஜம்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை

பின்னட்டையில் ஸ்ருதிஹாசனின் இளமை பளீரிடுகிறது.
- பாசித், பழனி

நடிகர்சங்க தேர்தலில் எந்த அணிக்கும் ஆதரவு இல்லை என்று அஜித் நிலைப்பாடு எடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. பெரிய சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான நாடக நடிகர்களுக்கும் பொதுவான சங்கம் அது. சினிமா தொழிலாளர்களின் உரிமைகளைக் கேட்டு வாங்கித் தரக்கூடிய சங்கத்தினை நல்லவர்கள் நிர்வகிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் அஜித் தன்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
- பழனி நகர ஒன்றிய புரட்சித்தளபதி விஷால் தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம், செல் : 9976156684



‘தனக்கு போட்டியே இல்லை’ என்று தமன்னா சொல்வது தன்னம்பிக்கையை மீறிய பேச்சாக இருக்கிறது. அவருக்கு போட்டி இருக்கிறதா இல்லையாவென்பதை ரசிகர்கள் நாங்கள்தான் சொல்ல வேண்டும்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு.

ஆர்யாவை தலைகீழாக நிற்கவைத்து ‘யட்சன்’ படத்துக்கு டப்பிங் பேசவைத்தார்கள் என்கிற செய்தி புதுமையாக இருந்தது. செய்யும் வேலை மீது பக்தி இருக்கும் நடிகர்களே இவ்வளவு உழைப்பைத் தரமுடியும்.
- அ.சம்சுதீன், நெய்க்காரப்பட்டி.

அஞ்சலியின் தங்கை பிரியங்காவை நடுப்பக்கத்தில் போட்டு எங்கள் தூக்கத்தைக் கெடுத்துவிட்டீரே!
- ப.முரளி, சேலம்.

‘டைம் மெஷின்’ பகுதியில் இசைஞானி இளையராஜாவின் படங்கள் அருமை.
- சரவணபெருமாள், திருமுல்லைவாயல்