தீபிகாவால் தீ பரவுது!



பாலிவுட் சமாச்சார்

விமர்சனரீதியாகவும் சரி, வணிகரீதியாகவும் சரி, இதற்கு முன்பாக பாலிவுட்டில் தீபிகா படுகோனே அளவுக்கு உயரத்துக்கு போன நடிகை வேறு யாருமே இல்லை என்கிறார்கள்.

இருபத்தொன்பது வயதில் அவர் அடைந்திருக்கும் புகழ் அசாத்தியமானது.ஹாலிவுட்டில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்தாலும் பாலிவுட்டை கைவிட அவருக்கு மனமில்லை.

‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் - 7’ படத்துக்காக இவரை அழைத்தபோது ‘ராம்லீலா’வில் பிஸியாக இருந்ததால் மறுத்துவிட்டார். இப்போது வின்டீசலின் வற்புறுத்தல் காரணமாக ‘ட்ரிபிள் எக்ஸ்’ சீரிஸில் கமிட் ஆகிவிட்டார் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் போய்விட்டால் மும்பையை மறந்துவிடுவாரோ என்று இளம் ஹீரோக்கள் ஏக்கம் கொண்டு பசலை நோய் பீடித்துத் திரிகிறார்கள்.