காமெடிக்கும் ஹீரோவுக்கும் மோதல்!



அவ்ளோதான் மேட்டர்

இரண்டாம் லெவல் ஹீரோ அவர். களவாண்ட படம் மூலம் திரையுலகில் வாகை சூடியவர். அவருக்கும் காமெடி நடிகருக்கும் உரசல் என்பது லேட்டஸ்ட் கோலிவுட் டாக். சமீபத்தில் திரைக்கு வந்த சூப்பரின் பெயர் கொண்ட படம், பேய்ப்படம் என்று அடுத்தடுத்து தன் கேரியர் கிராப்பில் உயரப் பறக்கும் சின்ன வடிவேலு இந்த காமெடி. இருவரும் இணைந்து நடிக்கும் bridegroom lion படத்தின் படப்பிடிப்பின்போது சின்ன ஈகோ க்ளாஷில் நெருப்புப் பொறி பறந்ததாம். இருதரப்பு அல்லக்கைகள் எண்ணெய் ஊற்றி, ஊற்றி இந்த தீயை பெருந்தீயாக வளர்த்திருக்கிறார்கள். வெற்றிகரமான காம்பினேஷனாக இதுவரை வலம் வந்த இவர்கள் இனிமேல் சேர்ந்து நடிப்பது டவுட்டு என்கிறது ஒரு க்ரூப்பு. இன்னொரு க்ரூப்போ, இதெல்லாம் படத்துக்கு பப்ளிசிட்டிப்பா என்று கண்சிமிட்டுகிறது. எது உண்மையோ... யாமறியோம் பராபரமே!