டாலர் தேசத்து கவர்ச்சி!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

எங்கள் கனவுலக தேவதை நயன்தாராவை அட்டைப்படத்தில் கண்டதுமே வேலூர் வெயிலின் தாக்கம் குறைந்தது. அவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரப்போவது மகிழ்ச்சியான செய்தி.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

‘ஜித்தன்-2’, ‘கிடா பூசாரி மகுடி’, ‘ஓய்’, ‘யோக்கியன் வர்றான் சொம்பை தூக்கிவை’ ஆகிய படங்களைப் பற்றி அதை எடுத்தவர்களே மறந்துவிட்ட நிலையில், விமர்சனம் எழுதி பாராட்டியிருக்கும் உங்கள் கடமையுணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?
- ரங்கன், சைதாப்பேட்டை.

சேச்சி ஆவதற்கான உடற்தகுதி வரலட்சுமிக்கு நிச்சயமாக உண்டு. நம்ம ஊர் சூறாவளி, கேரளாவை சூறையாடட்டும் என்று வாழ்த்துகிறோம்.
- மணிவண்ணன், திருச்செந்தூர்.

சினிமா, பெண்களுக்கு பாதுகாப்பான துறைதான் என்று பெண் இயக்குநர் உஷா கிருஷ்ணன் கூறியிருப்பது என்னைப் போன்று திரையுலகில் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு ஊட்டம் தரும் டானிக்காக அமைந்திருக்கிறது.
- குந்தவை, தஞ்சாவூர்.

முட்டைக்கண் அழகி ஜனனி அய்யரின் பேட்டி பிரமாதம். ஆனால், அந்தளவுக்கு கிளாமர் காட்ட மாட்டேன் என்று அவர் அடம் பிடிப்பது எங்கள் மனசை நொறுங்கச் செய்கிறது.
- வேதாசலம், பாடலூர்.

நடுப்பக்க அஞ்சலியின் டாலர் தேசத்து கவர்ச்சியில் கிறங்கிவிட்டோம். புளோ அப்களும் அதற்கு ‘வண்ணத்திரை’ கொடுக்கும் கமெண்டுகளும் டாப்போ டாப்பு. தொடரட்டும் உங்கள் சேவை.
- செந்தில்நாதன், ஹைதராபாத்.

‘மவுனமும் ஒலிதான்’ என்று விளக்கிய ஒலிப்பதிவாளர் உதயகுமாரின் பேட்டி சிறப்பாக இருந்தது. தொடர்ச்சியாக இதுபோன்ற டெக்னீஷியன்கள் பேட்டியை பிரசுரியுங்கள்.
- ராஜேந்திரன், வடபழனி.