ட்ரிபிள் ஷாட்!



ராஜமவுலியின் தந்தை பிரசாத் எழுதியுள்ள ‘மேரா பாரத் மஹான்’, வரலாற்றுப் படத்தில் சன்னி தியோல் நடிக்கிறார்.‘பார் பார் தேகோ’ படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் லிப் டு லிப் காட்சியில் கேத்ரினா கைப் நடித்துள்ளார். இதை அறிந்து சித்தார்த்தின் காதலி அலியா பட் கொதித்துப் போயுள்ளாராம்.

‘ஹவுஸ்புல்-3’யில் மூன்று கவர்ச்சி வெடிகள். ஜாக்குலின், நர்கீஸ், லிசா ஹேடன் மூவருமே பிகினி உடையில் வந்து ரசிகர்களை குஷிப் படுத்துவார்களாம்.

சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கும் ‘ஃபோர்ஸ்-2’ படத்தின் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பணிகள் முழுக்க ஹாலிவுட்டில் நடக்கிறது.‘ரங்கூன்’ படப்பிடிப்பில் சைப்அலிகான் படுகாயம் அடைந்துள்ளார். ஸ்பாட்டில் அவரை கங்கனா ரணாவத் அக்கறையுடன் கவனித்துக் கொண்டாராம். இதனால் சைபின் மனைவி கரீனா கடுப்பில் இருக்கிறாராம்.

- ஜியா