கோடைவெறி கிளர்ச்சி!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

வாசக எழுத்தாளர்களின் முன்னோடியும், ஆசானுமான அயன்புரம் த.சத்தியநாராயணனின் ‘கபாலி’ கதை அட்டகாசம். கே.எஸ்.ரவிக்குமார் மட்டும் இதை வாசித்திருந்தால் உடனடியாக ரஜினியிடம் கால்ஷீட் வாங்கிவிட்டிருப்பார்.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

கேஷாவின் நடுப்பக்க ஸ்டில்லைக் கண்டு ஆராய்ந்ததில் தமிழ் சினிமா வரலாற்றில் ரம்பாவுக்குப் பிறகு இவர்தான் தலைசிறந்த தொடையழகி என்று தாராளமாக ஜொள்ளலாம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.



‘Size does matter’ தகவல்கள் கோடைவெறியில் கிளர்ந்துபோய்க் கிடந்த எங்களை கூல் ஆக்கிய கூல்டிரிங்க்ஸ். நீங்களே போய் டேப் வைத்து அளவெடுத்த மாதிரி எப்படித்தான் இவ்வளவு விவரங்களை நுணுக்கமாக சேகரித்தீர்களோ?
- அ.காஜாமைதீன், பழனி.

தன்னுடைய நண்பர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக தன் சொந்த செலவில் பாடல் எடுத்துக் கொடுத்தார் என்கிற இயக்குநர் மகேந்திரனின் செய்தியை வாசித்தபோது நெகிழ்வாக இருந்தது. அந்தக் காலத்தில் நட்பில் மனிதம் இருந்தது. இப்போது வணிகம் மட்டுமே இருக்கிறது.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

சரோஜாதேவி பதில்களில் ‘மத்திய’ பிரதேச சேலை கட்டும் முறையை விளக்கும் விதமாக செயல்முறைப் படத்தை போட்டிருந்தது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பாராட்டுக்குரிய செயல்.
- குந்தவை, தஞ்சாவூர்.

ஷாலினியின் சிறுவயது படங்களைக் கண்டபோது எண்பதுகளுக்கு டைம்மெஷினில் ஏறிப்போய்விட்ட ஃபீலிங் கிடைத்தது.
- ராஜேஷ், தேன்கனிகோட்டை.

ப்ளோஅப்புகளுக்கு நீங்கள் தரும் கமெண்டுகள் கவர்ச்சியாக மட்டுமில்லாமல் இலக்கிய உணர்வுகளையும் கிளறக்கூடிய வகையில் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுகள்.
- எஸ்.பரமேஸ்வரன், பல்லடம்.