தேன்கூட்டை தேடுகிறேன்



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

சமந்தாவோட தாராள மனசை பளிச்சுன்னு வெளிப்படுத்திய அட்டைப்படத்துக்கே எட்டு ரூபா ஓவர். உள்ளே இருந்த பக்கமெல்லாம் எங்களுக்கு எக்ஸ்ட்ரா போனஸ்தான்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

இதுவரை நான் வாசித்த சமந்தாவின் பேட்டிகளிலேயே, இந்தவார ‘வண்ணத்திரை’யில் வெளியாகியிருந்த பேட்டிதான் முதிர்ச்சியான கருத்துகளைக் கொண்டிருந்தன.
- அ.காஜா மைதீன், பழனி.

‘அட்ரா மச்சான் விசிலு’ படம் பற்றிய இயக்குநர் திரைவண்ணனின் பேட்டி படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘தேன் சொட்டும் ஜோடி இருந்தால் பாலைவனம் கூட பாரீஸ் நகரம்தான்’ என்கிற சரோஜாவின் பதிலை வாசித்துவிட்டு தேன்கூட்டை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

‘என் உயிர் தோழன்’ படத்தில் நாயகியாக அறிமுகமான ரமா, தன்னை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவுக்கே ஜோடியாக நடிக்கப் போகிறார் என்கிற தகவலை வாசிக்கும்போது வாழ்க்கை ஒரு வட்டம் என்கிற தத்துவம் நினைவுக்கு வருகிறது.
- குந்தவை, தஞ்சாவூர்.

சமந்தா, தன்னுடைய கல்யாணத்துக்கு ‘வண்ணத்திரை’க்கு இன்விடேஷன் வைப்பதாக சொல்லியிருக்கிறார். அவர் கல்யாணத்தில் விருந்துண்ண மொய் பணத்தோடு வாசகர்கள் தயாராக இருக்கிறோம் என்கிற தகவலை சேர்ப்பித்து விடுங்கள்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.