எட்டு ரூபாய் என்டர்டெயின்மென்ட்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

வழவழ முன்னட்டையில் தளதள தாரகையைக் கண்டு மனம் மகிழ்ச்சிக்கூழ் காய்ச்சிடுது. ஆடி மாசம் வேற.
- கவிஞர் கவிக்குமரன், பெரவள்ளூர்.

கவர்ச்சியாக நடிப்பேன், முத்தக் காட்சியிலும் நடிப்பேன் என்றுதான் நடிகைகள் ஸ்டேட்மென்ட் விடுவார்கள். ஐஸ்வர்யா ராஜேஷோ வித்தியாசமாக மொட்டையடித்தும் நடிப்பேன் என்று சொல்லுவதின் மூலம் மற்றவர்களிடமிருந்து மாறுபடுகிறார்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

சரோஜாதேவி பதில்களை இன்னும் கூடுதல் பக்கங்களுக்கு அதிகரித்து வெளியிட வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
- அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி.

கமலின் பேச்சை கேட்டுக் கொள்வேன்; ஆனால், என் மனம் போல்தான் நடப்பேன் என்று சொல்லும் கௌதமியே பாரதி கண்ட புதுமைப்பெண்.
- பொ.சின்னராஜா, குற்றாலம்.

ஆண்டுகள் கழிந்தாலும் இளமை வனப்பில் இதயங்களை ஈர்ப்பதில் என்றுமே நம்பர் ஒன் நம்ம ‘வண்ணத்திரை’தான். நயன்தாராவின் முன் - பின் அட்டைகள் சூப்பர்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

நடுப்பக்கத்தில் நீலம். ரசிக்கவைத்த கவர்ச்சிக் கோலம். ஆறு வித்தியாசங்களை விட்டு நகரவே முடியாதபடி ‘பச்சக்’கென்று கண்கள் ஒட்டிக்கொண்டன.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘ஹீரோயினிஸம்’ பகுதியில் தமிழ் சினிமாவில் தற்போதைய எல்லோருக்கும் அம்மாவான சரண்யா குறித்த கட்டுரை சிறப்பு. வாராவாரம் எட்டு ரூபாய்க்கு நீங்கள் கொடுக்கும் என்டர்டெயின்மென்ட், முழுநீளப் படத்தின் சுவாரஸ்யத்துக்கு இணையானது.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.