யானை மேல் குதிரை சவாரி



காமநெடி!

நெசவுத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஹீரோயின் அர்ச்சனா சிங் மீது மோகம் கொள்கிறார் முதலாளி முத்துராமன். அதே ஊரில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும், சுவாமிநாதனும் சிறியளவில் இதே தொழிலைச் செய்து வருகிறார்கள்.

மூவருக்கும் லாப அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், மூவருக்குமே இருக்கும் ஒரே ஒற்றுமை அர்ச்சனாசிங் மீதான மையல். இவர்கள் தவிர்த்து ஐஸ் வியாபாரி கிருஷ்ணமூர்த்திக்கும் அர்ச்சனா மீது ஒரு கண். அர்ச்சனா மீது இந்த காமக்கொடூரன்கள் சவாரி செய்தார்களா இல்லையா என்பதே ‘யானை மேல் குதிரை சவாரி’.

ஹீரோவே இல்லை என்பதால், ஹீரோயின் அர்ச்சனா சிங் மீட்டருக்கு மேல் நடிப்பை வழங்கியிருக்கிறார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சுவாமிநாதன் இருவரும் காமெடி போர்ஷனை எடுத்துக்கொண்டு முத்துராமனுக்கு வில்லத்தனத்துக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள்.

தாஜ்நூரின் இசை வழக்கம்போல இதம். மோகனின் ஒளிப்பதிவு ஓக்கே ரகம். காமநெடி வசனங்களால் தியேட்டர் பக்கம் தாய்க்குலங்கள் யாரும் தலைவைக்க முடியாதபடி படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் கருப்பையா முருகன்.