விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்



ஃபேஸ்புக் விபரீதம்!

சஞ்சய்க்கும், அருந்ததி நாயருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது. கடன் பிரச்னை ஒன்றுக்காக, படம் எடுப்பதற்கு ஊருக்கு வரும் இயக்குநரோடு சேர்ந்து, அவர் படம்பிடிக்க உதவுகிறார் ஹீரோ சஞ்சய்.

‘கேண்டிட்’ பாணியில் அருந்ததிக்கே தெரியாமல் படம் பிடித்து, அதில் சஞ்சய் நடிக்கும் காட்சிகளை இணைத்து இணையத்தில் படத்தை ரிலீஸ் செய்துவிடுகிறார் தம்பி ராமையா. இந்த கசமுசாவால் சஞ்சய்யுடன் அருந்ததி நாயர் ஊரைவிட்டு ஓடிவிட்டார் என்று ஊரில் செய்தி பரவிவிடுகிறது.

அருந்ததி நாயரைத் தேடிக் கண்டுபிடித்து ஊருக்கு கொண்டுவந்தால்தான் குடும்ப மானத்தைக் காப்பாற்ற முடியும். சஞ்சய் எப்படி தன்னுடைய பிரச்னைகளைச் சமாளித்தார் என்பதே கதை.சஞ்சயின் நடிப்பு இயல்பு. அருந்ததி நாயர், லோபட்ஜெட் லட்சுமி மேனன். தம்பிராமையா, மயில்சாமி, யோகிபாபு, ரோபோ ஷங்கர் என்று காமெடி கூட்டணி சிரிக்கவைக்க முயற்சித்திருக்கிறார்கள்.

எஸ்.கே.மைக்கேல் ஒளிப்பதிவு ஓக்கே. ஃபேஸ்புக்கால் இளம்பெண்களுக்கு ஏற்படக்கூடிய விபரீதத்தை எடுத்துக் காட்டியிருப்பதில் பாஸ் மார்க் வாங்குகிறார் இயக்குநர் வின்சென்ட் செல்வா.