அயிட்டத்துக்கு போட்டி!



“வாய்ப்புக்காக எதை வேண்டுமானாலும் ஹீரோயின்கள் இழக்கிறார்கள்” என்கிற சோனம்கபூரின் ஸ்டேட்மென்டுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. கவர்ச்சி பாம் ஷெர்லீன் சோப்ரா, “சோனம் சொந்த விஷயத்தை மட்டும் பார்க்கட்டும். மற்றவர்களின் பெட்ரூமில் என்ன நடந்தால் அவருக்கு என்ன?” என்று படுசூடாக விளாசியிருக்கிறார்.

இளம் ஹீரோயின் லிசாஹே டனுடன் படப்பிடிப்பில் கூடுதல் நெருக்கம் காட்டுகிறாராம் அபிஷேக் பச்சன். அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் வெளிநாட்டு டூர், பொதுநிகழ்ச்சிகள் என்று பிஸியாக இருப்பதே இந்த கும்மாளத்துக்கு காரணம் என்கிறார்கள்.‘இந்தியா மை கன்ட்ரி’ படத்தில் பிரெஞ்சுப் பெண்ணாக நடிக்கிறார் அலியாபட். இதற்காக அவரது காதலர் சித்தார்த் கபூர் காதலோடு, பிரெஞ்சும் சேர்த்து கற்றுத் தருகிறாராம்.

ஷாருக்கின் ‘ரயீஸ்’, ஹிரித்திக்கின் ‘காபில்’ இரண்டும் போட்டி போட்டு ரிலீஸ் ஆகிறது. ‘ரயீஸ்’ படத்தில் ‘லைலா ஓ லைலா’ பாடலை ரீமிக்ஸ் செய்து சன்னிலியோனை ஆடவைத்திருக்கிறார்கள். பதிலுக்கு ‘காபில்’ படத்தில் ‘சாரா ஜமனா’ என்கிற பழைய பாட்டை தூசு தட்டி அயிட்டம் டான்ஸ் ஆடுகிறார்கள். ‘சபாஷ் சரியான போட்டி’ என்று அயிட்டம் டான்ஸ் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அனுஷ்கா சர்மா போல சிறுபட்ஜெட் படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார் கேத்ரினா கைஃப். இதற்காக அனுஷ்காவின் ஆலோசனை கேட்க போன் செய்தால், ‘நோ டைம்’ என்று கூறி கேத்ரினாவின் பஞ்சு மனசை பொசுக்கிவிட்டாராம் அனுஷ்கா.

- ஜியா