பருவப்பசிக்கு பன்பட்டர் ரொட்டி!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

500வது படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை நிராசையாகிவிட்ட நிலையில் காலமாகிவிட்ட ‘தவக்களை’ சிட்டிபாபுவின் கடைசி பேட்டி கண்களைக் குளமாக்கி விட்டது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

சினிமாவை சீரழிக்கும் பார்ட்டி கலாச்சாரம் குறித்து தைரியமாக எழுதிய ‘வண்ணத்திரை’க்கு சல்யூட்.
- அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி.

‘அள்ளு வா’ என்பதுதான் பிற்காலத்தில் ‘அல்வா’வாக மாறியிருக்கும் என்கிற சரோஜாதேவியின் மொழி ஆராய்ச்சி தீவிரமானதும், சமூகத்துக்கு அவசியமானதும் ஆகும்.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

கருப்பு என்கிற காரணத்தால் ஒதுக்கப்படும் பெண்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறார் நந்திதா தாஸ்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

நடுப்பக்கத்தில் தொடை காட்டும் பவானி ரெட்டி.... பருவப்பசியில் பார்ப்போருக்கு பன்பட்டர் ஜாம் ரொட்டி....
- கவிஞர் கவிக்குமரன், பெரவள்ளூர்.

சரோஜாதேவி பதில்களில் வாரத்துக்கு வாரம் கிக் எக்ஸ்ட்ரா ஆகிக்கொண்டே போகிறது. அதிலும் நடுப்பக்கத்துக்கு முன்பாக இந்தப் பகுதியை போடும் உங்கள் மூளையே மூளை.
- உமரி பொ.கணேசன், மும்பை-37.

‘அமாவாசை’ வாயிலாக அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் எங்கள் வெள்ளிவிழா நாயகன் ஜெய் ஆகாஷ், பவுர்ணமியாக பிரகாசிக்கட்டும்.
- குந்தவை, தஞ்சாவூர்.