ஸ்ருதி கடுப்பு!



‘தங்கல்’ படத்தில் அமீர்கான் மகளாக நடித்த பாத்திமா ஷேக், பிகினியில் இருக்கும் படங்களை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். முப்பது நாள் நோன்பிருக்கும் ரம்ஜான் மாதத்தில் எப்படி இதுபோன்ற போஸ் தரலாம் என நெட்டிசன்கள் அவரைத் தாக்கத் தொடங்கிவிட்டனர்.

ஜெர்மனுக்கு மோடி சென்றபோது அங்கு அவரைச் சந்தித்த பிரியங்கா சோப்ரா, குட்டை பாவாடை போட்டுக்கொண்டு கால் மீது கால்போட்டு அமர்ந்திருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், ‘பிரியங்கா இயல்பாகவே நடந்துகொண்டார். அவரது செயல் தவறில்லை’ என சன்னி லியோன் சப்போர்ட் செய்திருக்கிறார்.

‘ஜுட்வா 2’ படத்தில் டாப்ஸி, ஜாக்குலைன் ஹீரோயின்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவருக்கும் இடையே கடும் மோதலாம். சேர்ந்து பேச வேண்டிய காட்சிகளில் கூட நடிக்க மறுக்கிறார்களாம். இதனால் டைரக்டர் அப்செட் ஆகியுள்ளார்.‘பெஹன் ஹோகி தேரி’ படத்தை பெரிதும் நம்பி இருந்தார் ஸ்ருதிஹாசன். படம் படுதோல்வியைச் சந்தித்து இருப்பதால் செம கடுப்பில் இருக்கிறாராம். அடுத்தடுத்து பங்கேற்க இருந்த சில நிகழ்ச்சிகளை ஸ்ருதி ரத்து செய்துவிட்டாராம்.

- ஜியா