ஷாருக்குக்கு அல்வா கொடுத்த அவரது மனைவி!



ஒரு ஸ்டாரின் பெயரை ரன்பீர் கபூர் சொன்னதும் பளி்ச்சென தனக்கு அவரைப் பற்றி என்ன தோன்றுகிறதோ அதை கேத்ரினா கைப் சொல்ல வேண்டும். இப்படியொரு விளையாட்டை ஃபேஸ்புக் லைவில் இவர்கள் ஆடினர். ஐஸ்வர்யா ராய் என ரன்பீர் சொன்னதும் நரி என கேத்ரினா உடனே சொல்ல ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஏற்கனவே ஷாருக்கானுடன் இரண்டு படங்களில் நடித்துவிட்டார் அனுஷ்கா சர்மா. இப்போது ‘ஜப் ஹரி மீட் சேஜல்’ படத்திலும் இயக்குனர் ஆனந்த் ராய் இயக்கும் படத்திலும் ஷாருக்குடன் நடித்து வருகிறார். அனுஷ்கா, விராட் கோஹ்லியை காதலித்து வருவதால், தனது கணவர் பாதுகாப்பாக இருப்பார் என்று அடுத்தடுத்து டிக் அடித்துவிட்டாராம் ஷாருக்கின் மனைவி கவுரி. இதனால் பல்லைக் கடித்துக்கொண்டிருக்கிறாராம் ஷாருக்.

‘டியூப்லைட்’ படத்தில் சல்மான்கானுடன் முக்கிய வேடத்தில் அக்‌ஷய்குமாரை நடிக்க வைக்க டைரக்டர் கபீர் கான் திட்டமிட்டிருந்தார். ஆனால் தனது தம்பி சோகைல் கானை நடிக்க வைத்துவிட்டாராம் சல்மான்.அரைகுறை ஆடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை நெட்டில் தீபிகா படுகோன் வெளியிட, ‘ஆபாசப் பட நடிகை ரேஞ்சுக்கு போஸ் தந்திருக்கீங்களே’ என நெட்டிசன்கள் போட்டுத் தாக்கினர். ‘நான் என்ன உடுத்தணும்கிறதை நீங்க சொல்லாதீங்க. உங்க வேலையை மட்டும் பாருங்க’ என கொதித்திருக்கிறார் தீபிகா.

- ஜியா