படங்கள் ஏ கிளாஸ்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

அறிமுகமாகி 25 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இன்னமும் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும் அரவிந்த்சாமியின் பேட்டி அட்டகாசம். சாமி, பொன்விழா காணவேண்டும். அந்தப் பேட்டியையும் நாங்கள் ‘வண்ணத்திரை’யிலேயே வாசிக்க வேண்டும்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

பெருமூச்சு விடும் நிமிடங்கள் நிஜங்களாக அமைந்தாலும் இன்னமும் தேவை என்கிற நிறைவில்லா நிலையை எட்டக்கூடிய ஜென் தன்மையை சரோஜாதேவி பதில்கள் பகுதியில் வாராவாரம் அடைகிறோம்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

புளோஅப்புக்காக கமெண்டா அல்லது கமெண்டுக் காக புளோஅப்பா என்று பிரித்தறிய முடியா வண்ணம் ஜாடிக்கேத்த மூடியாக ஒன்றுக்கு ஒன்று அவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக நடுப்பக்க ஜட்கா பொண்ணின் கண்ணு குட்கா என்று எழுதிய கைகளுக்கு தங்கக்காப்பு வாங்கிப் பூட்ட வேண்டும்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

பிரியா ஆனந்தை பிழியும் சோகம் பற்றி வாசித்து நாங்களும்கூட கடும் சோகத்துக்கு ஆளாகிவிட்டோம்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

ஜி.எஸ்.டி. பிரச்சினையால் திரையரங்கங்கள் பக்கம் ஒதுங்கமுடியாத எங்களுக்கு எட்டே ரூபாயில் நாலு படங்களைப் பார்த்த உணர்வை ‘வண்ணத்திரை’ விமர்சனங்கள் கொடுத்துவிட்டன. வானளாவிய நன்றிகள்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘நான் கவர்ச்சியா நடிக்கலை’ன்னு பேட்டியிலே பிரணீதா சொல்லுறாரு. அந்தப் பேட்டிக்கு நீங்க போட்டிருந்த படங்கள் ‘ஏ’ கிளாஸ்.
- கே.கே.பாலசுப்பிரமணியன், பெங்களூர்-36.

‘சகுந்தலாவின் காதலன்’ பற்றி வாசித்ததுமே படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்கிற ஆவல் பிறக்கிறது.
- ‘கவிஞர்’ ப.முரளி, சேலம்.

திறமையானவர்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் தனி மரியாதை உண்டு என்பதற்கு அரவிந்த் சாமிக்கு மீண்டும் கிடைத்திருக்கும் இடமே சாட்சி.
- உமரி பொ.கணேசன், மும்பை-37.